Monday, October 31, 2011

நமக்கு ஒரு விஷயம் புரீல்லீங்க........!!1


.தமிழ்நாட்டுல ஜனங்கோ படிச்சவங்கோ,பெரிய பெரிய அறிவாளிங்க,வலைபதிவலாம் பொட்டு செம கித்தப்ப இர்கங்கோ.ஆனால்  மழ காலத்துல இவிக பன்ற அலம்பள் கொஞசம் ஜாசஸ்தீங்கோ...
....மழ பேஞ்ஜாலும் டெலிவிஷத்துல(அதாங்க டீ.வீ) ந்யூஸ் ல வந்து மழ பேய்து,தண்ணி தேங்குது,ஒரே கஸ்டமாகீதுனு கொறை சொல்றாங்கோ.., மழ பேயாகாட்டியும் மழ பேய்ல தண்னியே இல்ல ஒரே கஸ்டமாகீதுனு அப்பவும் கொறை சொல்றாங்கோ..இவஙகள இன்னதாம் செய்யற்து.
......ஏரி குளம் குட்டைனு ஒரு பள்ளம் விடாமல் பார்த்து பார்த்து ஊட்டை கட்டிகினாங்கோ, அப்பால மழ பேஞ்ஜாகாட்டி ஊட்டுகுள்ள் தண்ணி வர்து ,தண்ணி பாம்பு வர்துனு , ஸன் டீ.வீ.ல கொறை சொல்றாங்கோ.
...... ஏரி குளம் குட்டைனு ஒரு பள்ளம் விடாமல் பார்த்து பார்த்து ஊட்டை கட்டிகினா, அப்பால மழ காலத்துல ஊட்டுகுள்ள தண்ணி வராம, பெட்ரோல வரும்.
சொல்லுஙகப்பு.....
பின்குறிப்பு.....
வேளச்சேரி,மடிப்பாக்கம்,மூர்ச்சனாம்பேட்டை(அதாங்க  மூவரஸம்பட்டு)அம்பத்தூர்,ஆவடி,புய(ழ)லேரி,மூலகொத்தளம்.
காக்களூர் ஏரி,வியாசர்பாடிலலாம் ஊட்ட கட்டிகின பெறியோர்களை சொல்லலீங்கோ,பொதுவவே தமிழ் நாட்டு ஜனங்கலதான் சொன்னெங்கோ..!! 

Sunday, October 30, 2011

அண்ணா ஹஸாரேயும் தேர்தலும்..., ஒரு கேள்வியும்...


அண்ணா ஹஸாரேயும் தேர்தலும்..., ஒரு கேள்வியும்..........
 ....அண்ணா ஹஸாரே அவர்கள் ஏப்ரல் 10தாம் தேதி -2011 வருடம் ,ஊழலை எதிர்த்து ஒருநாள் அடயாள உண்ணாவிரதம் தலைநரகத்துல இருந்தார்.ஏப்ரல் 13ம்தேதிதமிழ்நாட்டு தேர்தலிலே வரலாறு காணாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் நடைபெற்றது.
.........வாழும் வள்ளுவர்& பார்ட்டிய ஜனங்கொ வூட்டுக்கு அனுபிச்சிடாங்கோ.அவரு பிள்ளை குட்டிஙகோ மேல மானாவாரிய ஊயல் புகார்.,குற்றம் சுமக்கபட்டு,சிலபேர் பெரிய வூட்டுக்கு(ஜெயிலுங்கோ) விருந்தாளி ஆக்கிடாங்கோ.
....ஐய்யா வாயும் வள்ளுவர் பகுத்தறிவு பாசறயிலே புரள்கின்றவர்  என்றாலும்,இந்துக்களயும் இந்து மத்ததயும் பல முறை நையாண்டி/கேலி செய்திரூந்தலும்  பகுத்தறிவு ம்ற்றும் கொள்கை(அது என்னனு கேக்க கூடாது-கொள்கை என்பது வசதிக்கேற்ப மற்றும் சமயத்திற்கேற்ப மாறும்) அல்லாத்தயும்  உட்டுபூட்டு தீபாவளிகொண்டாட  பொண்ண் இட்டார டெல்லி போயி தவம் கிடந்தும் ஒன்னும் நடக்கலை.இதுபோக..
...........ஹரியனால இடை தேர்தல்(அது என்ன இடைக்கு மட்டும் தேர்தல் மூஞ்சி கயுத்துக்கு கடயாதானு கேக்க கூடாது-எனக்கி தெரியாது அதான்)இப்பொதான் நடந்து முடிஞ்ச்சிர்சி.அஙனயும் அண்ணா ஹஸாரேயோட கூட்டளிங்கோ போயி காங்கிரஸுக்கு எதிராக பேசினாங்கோ.(  காங்கிரஸ ஹரியானாவுல ஆளும் கட்சி) காங்கிரஸஸுக்கு 3வது இடம் தான் கிடைத்தது.
........நீதி என்னானு பார்த்தா வாயும் வள்ளுவர்  தோல்விக்கி காரணம் மக்கள் வியிப்புனர்வா,இல்ல ஊயலானு .... இல்லாகட்டி அண்ணா ஹஸாரே உண்ணாவிரதமா?
 P.S
வேலொடு நின்றான்  இடு என்றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு...            
................. நான் வாயும் வள்ளுவர் அவர்களை இரவு/கொடுன்கோல்னு  ஒன்னும் சொல்லலீங்ங்க.அவரு தன் 1ரூவாக்கி அர்ஸி,அப்பால ரேஸன் கடயிலெ 25ரூவாக்கி 5 பொருள், ஓசில டெலிவிஸயம் குட்த்து நைனா நீ ஊட்லேயெ கிட (வெளில வராதே,என்குடும்பம் கொஞ்சம் பணம்,நிலம் நீச்சுலாம் சம்பச்சிகிட்டடும்னு-நீ பார்த்தா உனக்கு மனஸு வருத்தபடுனு ) ஏற்பாடு செய்த உத்தமரச்சே.

பய டேட்டா

பெயர்
……………… : கே.என். சிங்கமணி


புனைப்பெயர் ……………… இன்னும் யாரும் குடுக்கலை
தொழில் ……………… இதுவரை என்ன படித்துள்ளேன் என் அறிய முயல்வது


உபதொழில் ……………… மேலே படிக்க முயல்வது
உப உபதொழில் ……………… 1.)மொக்கை போடுவது 2)சொன்ன சொல் மாறாமல் இருப்பது
படிப்பு ……………… எம்.ஏ.பி.எஃப்{.M..A .B. F.}


வயது ……………… 24 (உப உபதொழில் என் -----2ஐ கவனிக்கவும் }
பொழுதுபோக்கு ……………… ப்ளாக் எழுத முயர்சிப்பது
துணைப்பொழுதுபோக்கு ……………… கலாய்ப்பது


பலம் ……………… மொக்கை
பலவீனம் ……………… அதே தான்
நம்பிக்கை ……………… என்னையும் பதிவாளர் என் ஏற்ப்பர்
பயம் ……………… என் வலைபூவை படித்துவிட்டு கல்லால் அடிப்பார்களோ?
லட்சியம் ……………… பச்சை இன்க் பேனால கையொப்பம் இடுதல்


சமீபத்திய சாதனை ……………… மொக்கை வலைபூக்களை படிப்பது,(காப்பி அடிக்க உதவும் இல்ல}
நீண்டகால சாதனை ……………… யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது.


இதுவரை மறந்தது ……………… நான் எழுதிய மொக்கைகளை


இனி மறக்க வேண்டியது ……………… நேற்று படித்த மொகக்கைகள்


சமீபத்திய எரிச்சல் ……………… ஜூகாடு ஆஸாமிக்ள்( பஞஜாபி சொல்- ஜுகாடு என்றால் தகிடுதத்தம் என்று அருத்தம்}


நீண்ட கால எரிச்சல் ……………… என்னால் ஜுகாடு செய்ய முடியவில்லை என்பது.
விரும்புவது ……………… என் பதிவயும்/வலைபூவையும் எல்லாரும் படிககனும்


விரும்பாதது ……………… உன் பதிவை/வலைபூவை படிக்க நாங்க தான் கிடைத்தோமா என் சொல்வதை